
இணைய ஊடுருவல் நடவடிக்கைகள் இவ்வாண்டின் முற்பாதியில் வெகுவாக அதிகரித்ததாகச் சில இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மோசடிக்காரர்கள், அதிகாரத்துவ அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளைப் போன்று பாவனை செய்து, தனிப்பட்ட தகவல்களைப் பெற முயல்வது அக்கறைக்குரிய ஒன்றாக உள்ளது.
இணையப் பாதுகாப்பு நிறுவனமான Sophos, சிங்கப்பூரில் உள்ள சுமார் நூறு நிறுவனங்களிடம் கருத்தாய்வு ஒன்றை நடத்தியது.
இணைய ஊடுருவல் சம்பவங்களின் எண்ணிக்கை, இவ்வாண்டு அதிகரித்திருப்பதாக 70 விழுக்காட்டு நிறுவனங்கள் குறிப்பிட்டன.
களவாடிய தகவல்களைக் கொண்டு மோசடிக்காரர்கள் அதிக அளவில் பிணைப்பணம் கோரும் சம்பவங்களும் நடந்துள்ளன.
உள்ளுர் உணவுப்பொருள் விநியோக நிறுவனமான Phoon Huatஉம் ஈராண்டுக்கு முன்னர் இணையத் தாக்குதலுக்கு இலக்கானது.
அந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இப்போது மேலும் பாதுகாப்பான மின்வர்த்தகத் தளத்தை அது இயக்குகிறது.