பிறந்து 6 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது.
மேலும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 ஆம்திகதி பிறந்த குறித்த குழந்தைக்கு, சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, குழந்தைகள் சிகிச்சை அறையில் குறித்த குழந்தையை அனுமதிக்க வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
எனினும், சிகிச்சை பலன் இன்றி குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது. அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளுக்கமைய, குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
எனினும், பிரசவத்துக்காக குறித்த குழந்தையின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனைகளின்போது, அவருக்கு தொற்று உறுதியாகியிருக்கவில்லை.
எனினும் இந்நிலையில், குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியானதன் பின்னர் மீண்டும் தாய்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்த போதிலும் அது தொடர்பான அறிக்கை இதுவரையில் கிடைப்பெறவில்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.