லெபனானிலிருந்து இஸ்ரேல் நோக்கி ரொக்கெட் தாக்குதல்

லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஏவப்பட்ட ரொக்கெகெட்டுகளில் ஒன்றை இஸ்ரேலின் இரும்பு டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியது.

இரண்டாவது ஏவுகணை கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு திறந்த பகுதியில் வீழ்ந்தாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினும் இஸ்ரேலை அனைத்து முனைகளிலும் பாதுகாக்க நாங்கள் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு படை உறுதிபடுத்தியுள்ளது.

இதனால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் மற்றும் சேதவிபரங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ரொக்கெட்டுகள் தெற்கு லெபனானில் ஒரு பாலஸ்தீனிய குழுவால் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *