ரஜினி வீட்ல விசேஷம்… மீண்டும் தாத்தாவாகிறார் சூப்பர் ஸ்டார்!

செம சந்தோஷத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அமெரிக்காவில் சிகிச்சை நல்லபடியாக முடிந்து சென்னை திரும்பியவருக்கு இரண்டாவது மகள் செளந்தர்யா ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் ‘வஞ்சக‌ர் உலகம்’ என்ற படத்தில் நடித்தவருமான விசாகனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

சென்னை கடற்கரை சாலையிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த இத்திருமணத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

செளந்தர்யா – விசாகன் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சௌந்தர்யா கர்ப்பமாகியிருக்கிறார். சமீபத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிக்கு அவர் சென்னை திரும்பிய பிறகுதான் இந்த சந்தோஷச் செய்தியைச் சொல்லியிருக்கிறார் அன்பு மகள் செளந்தர்யா.

செளந்தர்யாவுக்கு ஏற்கெனவே 5 வயதில் வேத் எனும் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply