வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேலும் குறித்த விபத்து தொடர்பில் தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள இராணுவமுகாமுக்கு சென்ற பேருந்து ஓமந்தை பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

மேலும் இவ் விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியும கடும் சேதத்திற்குள்ளாகியது.

மேலும் இச் சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்