இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலை வரையான வீதி; மக்கள் பலத்த இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர்..!

குறிப்பாக இரட்டைவாய்கால் தொடக்கம் சாலைவரையான சுமார் 13கிலோமீற்றர் தூரமுடைய இடப்பரப்பிற்குள்ளே 450 குடும்பங்களுக்குமேல் வசிக்கின்றனர்.

இவ்வாறு அங்கு வசிக்கின்ற மக்கள் குறித்த வீதியினை தமது அன்றாட விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதுடன், அரசதிணைக்களங்களுக்குச்செல்வதற்கும், மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கும், வைத்தியசாலை மற்றும் வங்கி என்பவற்றில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தவீதி பயன்படுத்தப்படுகின்றது.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ஒருஇலட்சம் கிலோ மீற்றர் வீதி என்னும் திட்டத்திற்குள்ளேயும் இந்த வீதி உள்வாங்கப்படவில்லை என்பது கவலைக்குரியவிடயம்.

ஒவ்வொருவருடமும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினர், குறித்த வீதியில் நூறு மீற்றர் தூரமளவில் கிரவல் மூலம் செப்னிடுவார்கள். பின்னர் மழைக்காலங்களில் அவர்கள் செப்பனிட்ட பகுதியும் சேதத்திற்குள்ளாகிவிடும்.

இவ்வீதியைப் பயன்படுத்துகின்ற மீனவர்கள், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அவசரத்திற்கு வைத்தியாசாலைக்கு வருவதற்குக்கூட, புதுக்குடியிருப்புச்சென்று சுமார் 25கிலோமீற்றர் சுற்றியே வரவேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

அதிலும் புதுமாத்தளன் சந்தியில் இருந்து சாலைவரையான வீதி மிகவும் குன்றுங்குழியுமாகக் காட்சிதருகின்றது.

எனவே வீதி அபிவிருத்தித் திணைக்களம் தமது கனகரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, குன்றுங்குழியுமாகக் காணப்படும் குறித்தவீதியின், குழிகளையாவது நிரப்பி தற்காலிக சீரமைப்பினையாவது செய்துதரவேண்டும். அதற்கு தவிசாளர் எழுத்துமூலம் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு ஓர் கோரிக்கை கடிதத்தினை எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

இதற்கு தவிசாளர் க. விஜிந்தன் பதிலளிக்கும்போது,

உறுப்பினர் ஹஜீதரனால் குறிப்பிடப்பட்ட குறித்த வீதியின் தற்காலிக நடவடிக்கைகள் மற்றும், அதற்குப் பின்னரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வீதிஅபிவிருத்திணைக்களத்துடன் பேசுவோம். அந்த நடவடிக்கைகளுக்கு ஆவனசெய்வோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *