215,641 பேருக்கு நேற்று ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டன – சுகாதார அமைச்சு

இலங்கையில் நேற்று மாத்திரம் 215,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 104,617 பேருக்கும் இரண்டாவது டோஸ் 10,997 பேருக்கும் நேற்று செலுத்தப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 2,328 பேருக்கும் மடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் 97,699 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கையில் இதுவரை மொத்தம் 7,573,967 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.

அதே நேரத்தில் ஸ்புட்னிக்-வி, சினோபோர்ம் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி 1,697,686 பேருக்கு முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply