கல்முனை மக்களுக்கான விசேட செய்தி

கல்முனை பிராந்தியத்திற்கு அடுத்த வாரம் 50 ஆயிரம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (18) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான உயர்மட்ட சுகாதார அதிகாரிகள் குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்தனர்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணன் தலைமையில் பிராந்திய கொவிட் 19 தொற்று தொடர்பான கலந்துரையாடல் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எல்.பானப்பிட்டிய வைத்தியர் சுதத் தர்மரத்ன, கிழக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் எ.ஆர்.எம்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply