
நாடளாவிய ரீதியில் இன்றும் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில பகுதிகளில் ஏற்கனவே போராட்டங்கள் ஆரம்பித்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரியும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, ஹோமாகம பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியாறு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.