
கிளிநொச்சி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் வருகை தந்து மண்ணெண்ணை பெற்று செல்கின்றனர் என முகாமையாளர் தெரிவித்துள்ளார் .
மேலும் இது தொடர்பில் கிளிநொச்சி நகர் முகாமையாளர் தெரிவிக்கையில்
நாங்கள் குறுகிய நேரத்தில் மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ள முடிகின்றதோடு , 500 ரூபாவிற்கு மண்ணெண்ணை கிடைக்கின்றது. ஆனாலும் தோட்டம் செய்ய போதாது. அத்துடன் மீண்டும் வந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் தெரிவித்த்தார் .
இதேவேளை மண்ணெண்ணை தேவை அதிகரித்துள்ளதோடு தோட்டத்திற்கும், விளக்கு மற்றும் சமயல் தேவைக்கும் தேவைப்படுகின்றது . ஆனால் வரும் எரிபொருள் போதாது உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
தொடர்ந்து கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் தெரிவிக்கையில் டீசல் பெற்றுக்கொள்ள வந்தோம் . இருந்தும் கிடைக்கவில்லை. அதனால் காத்திருக்கின்றோம் , ஆனால் கிளிநொச்சி பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகளவான எரிபொருள் மக்களிற்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது .
அத்துடன் மக்களிற்கு முழுமையான சேவையை வழங்க எரிபொருளை போதுமான அளவில் பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதோடு வாகனங்களிற்கு மண்ணெண்ணை வழங்குவதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .