
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆவணம் போலியானது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கட்சியின் பெயர் பதிக்கப்பட்ட ஆவணத்தில் தனது கையொப்பத்துடன் பரப்பப்படும் செய்தி தவறானது என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பெயர் பதிக்கப்பட்ட ஆவணத்தில் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடனான செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.