
கொழும்பு, ஏப் 04
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமானதாக மாற்றப்பட்டு அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதோடு இந்தியாவின் கடனுதவிகள் இலங்கையை ஐந்து ஆறு வாரங்களிற்கே காப்பாற்றும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் ரணில் கூறியதாவது,
அரசாங்கத்தின் அதிகார கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்வதால் பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமானதாக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி போன்றவை ஒரு திசையிலும் ஏனையவை இன்னொரு திசையிலும் பயணிக்கின்றன.
நாட்டின் வங்கித்துறை ஆபத்தான நிலையில் உள்ளது. இந்திய கடனுதவிகள் நாட்டை சில வாரங்களிற்கே காப்பாற்றும். எண்ணெய் கப்பல் ஏற்கனவே இலங்கையில் உள்ளது ஆனால் விலைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கலாம் என்றார்.