
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே கொண்ட அமைச்சரவையுடன் கூடிய அரசாங்கமே மீண்டும் ஆட்சியமைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் அல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என தெரியவருகிறது.
அதேவேளை ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு புதிய அமைச்சரவையில் இடம்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என பேசப்படுகிறது.
எவ்வாறாயினும் விமல் வீரவங்ச நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து, தனக்கு 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அமைச்சரவையின் எண்ணிக்கையை 15 ஆக குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் தற்போதைய நிலையில், அனைத்து கட்சிகளும் இணைந்த கூட்டு அரசாங்கமோ, இடைக்கால அரசாங்கமோ அமைக்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது.