
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளையும் அமைச்சுக்குள் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி பல பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் ஏற்படுகிறது. ஆசியாவின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் தீர்வுகள் தேட வேண்டும். அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக ஒற்றுமை ஒரு தேசிய நலனாக செயல்பட வேண்டும்.
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறும், அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளுமாறும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.