
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உயர்பீடம் நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் ஒன்றுகூடியது.
குறித்த கூட்டத்தில் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள் அத்துடன் நாடளாவிய ரீதியில் மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பிலும் அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா என்பது தொடர்பிலும் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.
இந் நிலையில் இன்று மீண்டும் ஒன்றுகூடி இறுதி தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக சுதந்திரக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இந் நிலையில் நாட்டில் தற்போதைய அரசியற் பரபரப்புக்கு மத்தியில் சுதந்திரக்கட்சியின் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.