
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்,பொலிஸ் அதிகாரி ஒருவர் இதில் இணைந்துள்ளமை பாராட்டை பெற்றுள்ளது.
கொழும்பு – ஹோட்டாவ பிரதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
இதில் “Uniform உடன் இருந்தாலும் நாங்கள் மக்களுடன் இருக்கின்றோம் ” என பொலிஸ் அதிகாரி ஒருவர் போராட்டக்காரர்களின் ஒலிவாங்கியை கையில் வாங்கி அறிவித்துள்ளார்.
ஒரு பொலிஸ் அதிகாரி, மக்களின் போக்கை ஆதரிப்பதாக அறிவித்ததால், மக்கள் கூட்டத்திலிருந்து பலத்த கைதட்டல் கிடைத்தது.