
முழு அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்டபூர்வமாகவும் நிலையானதாகவும் பேணுவதற்கு நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) நியமித்திருத்ததோடு விளக்கமும் அளித்துள்ளது .
அந்த வகையில் பாராளுமன்றம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் நிதியமைச்சகங்களின் செயற்பாடுகளுக்காக சபைத் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் நாட்டில் தற்போது நிலவும் தேசிய சவாலுக்கு தீர்வு காண்பதற்கு தமது பங்களிப்பை வழங்குமாறு பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார் .
அத்துடன் குறித்த கலந்துரையாடலின் பின்னர் நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது .