
தற்போது நாட்டில் உருவாகியுள்ள அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் பல்வேறு கட்சிகளின் உயர்மட்டங்கள் ஒன்று கூடி கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வை நோக்கி அவசர சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர்
இந் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று மதியம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் விசேட கூட்டத்தை நடாத்தியிருந்தது.
இதேவேளை ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்பீடமும் தற்போது ஒன்றுகூடி அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.