
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் இன்று (04) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறி கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.