
இலங்கையில் அமுல்படுத்தப்படும் தினசரி மின்வெட்டுகளின் காலம் எதிர்வரும் நாட்களில் மேலும் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை (05) முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் கொழும்பில் சில முக்கிய இடங்களைத் தவிர, ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் 6 மணி 30 நிமிட மணிநேரம் மின்சாரம் தடைப்படும்.
குறித்த காலப்பகுதியில் கொழும்பின் முக்கியமான பகுதிகளில் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுலாகும் என PUCSL தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனல் மின் நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கல் காரணமாக 6 மணி 30 நிமிட மின்வெட்டுக்கு CEB கோரிக்கை, PUCSL ஆல் ஏப்ரல் 05 முதல் 08 வரை அங்கீகரிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையின் அடிப்படையில்
ABCDEFGHIJKL பகுதிகள் –
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
PQRSTUVW பகுதிகள் –
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை
CC1 பகுதி –
காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரை