
3 கட்சிகள் இணைந்ததுதான் கூட்டமைப்பு. எனவே எந்தக் கட்சியும், எந்த கட்சியினையும் வெளியில் போக சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் பலர் இங்கு முதலீடு செய்ய தயாராகவுள்ளனர். ஆனால், இங்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பார்க்கின்ற போது அவர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்.
அரசாங்கம் முறையாக நடந்தால் மாத்திரமே தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளிற்கு திடமான தீர்வினை பெறமுடியும். நல்லாட்சி அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கியமைக்கு முக்கிய காரணம் அவர்கள் புதிய ஒரு அரசியமைப்பினை உருவாக்குவதற்கு பெரும் முயற்சினை மேற்கொண்டமையால் மட்டுமே.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயமாக தீர்ப்பதற்கு செயற்பட்டுக்கொண்டிருந்த காரணத்தினால் தான் அவர்களுடன் ஒத்துழைத்துக்கொண்டிருந்தோம். மேலும் 3 கட்சிகள் இணைந்ததுதான் கூட்டமைப்பு. எனவே எந்தக் கட்சியும், எந்த கட்சியினையும் வெளியில் போக சொல்ல முடியாது.
தமிழ்த் தேசிய கூட்டடமைப்பு இடைக்கால அரசில் எச்சந்தர்ப்பத்திலும் அங்கம் வகிக்க மாட்டார்கள். ஏனெனில் தமிழ்த் தேசிய கூட்ட்டமைப்பினை பொறுத்த மட்டில் தமிழ் மக்களின் தமிழ் தேசிய இனவாதத்திற்கான ஒரு நியாயமான தீர்வினை காண்பதே நோக்கமாகும்.
இதனை சர்வதேச கட்சி மாநாட்டிலும் பின்னர் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதும் கூறியிருந்தோம்.
நாங்களும் இலங்கையில் ஒரு பகுதி இனத்தவர். இதனால் பொருளாதார பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு காணப்பட்டு, மக்கள் ஒழுங்கான வாழ்க்கை முறையினை வாழ வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.- என்றார்.