
பத்ரமுல்லை, ஏப் 4
பத்ரமுல்லையில் திங்கட்கிழமை பொது மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர் இதன்போது போராட்டக்களத்திற்கு சென்ற சீலரதன தேரரை பொது மக்கள் கோபமடைந்து அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் சீலரதன தேர் கலந்துகொள்ள முற்ப்பட்டார். எனினும் ஆத்திரமடைந்த சில ஆர்ப்பாட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டார் .
சீலரதன தேரர் பொதுமக்களுடன் இணைந்து அரசாங்கத்திற்க்கான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளார்.
இருப்பினும் போராட்டகளத்திற்கு பிக்கு வருவதை கண்டு ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிக்குவை பேச அனுமதிக்க மறுத்ததோடு, அவரை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, தேரர் போராட்டத்தை கைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.