இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி!

பாணந்துறை, பின்வத்த பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்தவர் பின்வத்த, உபோசதாராம வீதியை சேர்ந்த 53 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியான மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்தோடு பண முரண்பாடு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் நேற்று முன்தினம் இரவு (18) 9.15 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், கொலை செய்த நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தலையில் பலத்த காயங்களுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பாணந்துறை பிரதேச குற்ற புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பின்வவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply