எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30க்கு வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று சபையில் நேற்று உரையாற்றிய வினோநோகராத லிங்கம் அறிவித்தார்.
ஜேவிபியும் இதனை ஆதரிக்கவுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தீர்மானத்தை இதுவரை அறிவிக்கவில்லை
நேற்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக் கிடையிலான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.