யாழில் பௌத்த மயமாக்கல்- பிள்ளையாரை சுற்றி வர்ண நிறப்பூச்சு

யாழ் மொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்கள ஒத்த வகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டுவருகின்ற குளத்தின் சுற்று கம்பங்களுக்கு இவ்வாறு பௌத்த கொடிகளில் உள்ள நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

1996 ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த குளத்தின் பரப்பளவு 2013 ஆண்டு மீள அளக்கப்பட்ட நிலையில்1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த குளம் தற்போது புனரமைக்கும் போது குளத்திலிருந்து தூர்வாரப்பட்டு மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் இழுந்தது.

இன் நிலையில் யாழ்மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

இவ்வாறான நிலையில் அவர் பார்வையிட்டு சென்ற நிலையில் இவ்வாறு இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *