நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இப் பெருந்தொற்றில் இருந்து நாடு விடுபட வேண்டி கோவில்களில் யாக பூசைகள் இடம்பெற்று வருகின்றன
இந்த நிலையில் இன்றைய தினம் யாழ் பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலில் குறித்த யாகம் இடம்பெற்றுள்ளது.
நைனாதீவு நாக விகாரை விகாராதிபதியின் ஏற்பாட்டில் யாழ்பபாணம் வந்த ஞானசாரா தேரர் தலைமையிலான குழுவினர் குறித்த யாகத்தினை தற்போது நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுடன் பொன்னாலை வரதாராஜ பெருமாள் கோவில் குருக்களும் இணைந்து இந்த யாகத்தினை மோற்கொண்டுள்ளனர்.