வடக்கு அயர்லாந்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் அளவு செலுத்தும் பணிகள் ஜூலை 31ஆம் நிறைவடையும் என சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுகளில் புதிய எழுச்சி இருப்பதாக அவர் மேலும் கூறினார். இப்போது தடுப்பூசி போட சரியான நேரம் இதுவெனவும் வலியுறுத்தினார்.
நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நிலவரப்படி, வடக்கு அயர்லாந்தில் 2,168,431 கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
அவற்றில், 1,185,869 முதல் அளவுகளாகவும், 982,562 இரண்டாவது அளவுகளாகவும் இருந்தன.