ஸ்கொட்லாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் நோய்வாய்ப்படும் ஆபத்து அதிகம் உள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, தடுப்பூசி வழங்கப்படும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், குறைந்த ஆபத்து உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு இப்போது தடுப்பூசி வழங்கப்படாது.

இது தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான பிரித்தானியாவின் கூட்டுக் குழுவின் (ஜே.சி.வி.ஐ) சமீபத்திய பரிந்துரைகளைப் பின்பற்றுகிறது.

சுகாதார செயலாளர் ஹம்சா யூசப், தனது இரண்டாவது தடுப்பூசி அளவைப் பெற்ற பிறகு இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

‘நாங்கள் எப்போதும் ஜே.சி.வி.ஐ ஆலோசனையைப் பின்பற்றுகிறோம், தொடர்ந்து செய்வோம்’ என அவர் மேலும் கூறினார்.

ஜே.சி.வி.ஐ ஆலோசனையை பிரித்தானிய அரசாங்கமும் பின்பற்றும் என்பதை பிரித்தானிய தடுப்பூசி அமைச்சர் நாதிம் ஜஹாவி உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply