
நாட்டில் பேச்சு சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சரவைக்கு பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் சுருக்கமாக பதிலளித்தார்.
இதன்போது, வெளிவிவகார அமைச்சின் ஊடாக அரசாங்கம் மிச்செல் பச்லெட்க்கு முழுமையான பதிலை வழங்கும் என்று கூறினார்.