புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட கர்பிணித் தாய்மார்களுக்கு முதலாவது டோஸ் (சைனோபார்ம்) தடுப்பூசி இன்று செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி மருந்து அனைத்து பகுதி மக்களுக்கும் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணியை, புத்தளம் சுகாதார பிரிவினர் மற்றும் புத்தளம் யூத் விஷன் அமைப்பினர் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
குறித்த தடுப்பூசி ஏற்றும் பணி புத்தளம் பாத்திமா மகளிர் பாடசாலையில் இடம்பெற்றது.
ஊரடங்கு நேரத்திலும் கர்பிணித்தாய்மார்கள் முதலாவது டோஸ் (சைனோபார்ம்) தடுப்பூசியைப் ஏற்றுவதற்காக வருகைத் தந்ததை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்ட 39000 பேருக்கு கொவிட் தடுப்பூசி முதலாம் அலகு ஏற்றப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.