மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலிவ், 3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
மாலைத்தீவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரிகள் 15 பேருடன், இன்று செவ்வாய்கிழமை பகல் 11.30 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 102 என்ற விமான சேவையில், மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்துள்ளார்.