
நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த 4 வாரங்களாக அமுல்லபடுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.