திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழ் கைதிகள் தமக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஜனாதிபதிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழ் கைதிகள் இன்றுடன் 35 நாளாவதாக போராட்டத்தை முன்னெத்து வருகின்றனர்.
இதுவரை அவர்களுக்கு தீர்வு வழங்கப்படாத நிலையில் மேற்படி கோரிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்துத்தெருவிக்கையில்
எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய கடவுச் சீட்டை எடுக்க முயற்சி த்தமைக்கும், இந்திய நுழைவு சீட்டு காலாவதியான காரணத்தாலும், எல்லை கடந்து மீன் பிடிக்க வந்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு, குறைந்தபட்சம் 2 வருடங்களாக எந்தவித நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்காமல், கைவிடப்பட்ட சூழலில் இங்கு பரிதவிக்கின்றோம்.
இதேவேளை, நாளை 15 ஆம் திகதி மதிப்புக்குரிய முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் பிறந்த நாளை முன்னிட்டு 700 கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்கிறார்கள்.
மேலும், நாங்கள் எங்கள் தண்டனை காலங்களை கடந்து இருப்பதாகவும், எங்கள் குடும்பம் நாங்கள் இன்றி வேதனைக்குள்ளாகி இருக்கின்றது என்றும், இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவர்கள் எங்களுக்காக பரிந்துரை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.