அமைச்சர் ஒருவரால் சிறைச்சாலையில் கலவரம்!

ஹெலிகாப்டர் மூலம் அனுராதபுரத்திற்கு வந்த அரசாங்க அமைச்சர் ஒருவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் இருந்த அமைச்சர் சிறைச்சாலைக்குள் சென்று குற்றவாளிகளை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் சென்று மண்டியிட்டு தலையில் கைத்துப்பாக்கியை வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் தொடர்புடைய அமைச்சர் பல்வேறு இடங்களில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகத்தில் ஒரு கண்ணொளியினை வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Leave a Reply