கொரோனா தடுப்பூசி அட்டை இல்லாமல் பேருந்துகளில் ஏற்றுவதை நிறுத்துவதற்காக அடுத்த மாதம் முதல் மேற்கு மாகாணத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இந்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் இதற்கு தொடர்ந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என மேற்கு மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மாகாணத்தில் சுமார் 6,200 தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. மேலும் அந்த பேருந்துகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மாகாண பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா ஊசி அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் மேலும் பேருந்தில் ஏறியவுடன் அட்டையை சரிபார்க்கும் நடவடிக்கையை பேருந்து நடத்துனர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.