போதைக்காக மனைவியை தீ வைத்து எரித்த கணவன்!

ஐஸ் போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்காததால் தன் மனைவியின் கைகளையும் கால்களையும் கட்டி மடியில் வைத்து முகத்தை தீ வைத்து எரித்துள்ளதாக மொரட்டுவ பொலிசார் தெரிவித்துள்ளனர்

கொழும்பு மொராட்டுவ பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய சம்பவத்திற்கு உட்பட்ட பெண், முகம் மற்றும் கைகளில் பலத்த தீக்காயங்களுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபடுபவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

தீப்பிடித்த நேரத்தில் அவரது நான்கு மாத குழந்தை மனைவியின் மடியில் இருந்ததாகவும் அவர் குழந்தையை காப்பாற்ற படுக்கையில் இருந்து குதித்ததாகவும் இதனாலேயே பெண்னின் உயிர் தப்பித்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply