உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண் ஒருவரை இலங்கை கணவர் பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ய முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த நபர் இதற்கு முன்னரும் 36 வயது வெளிநாட்டுப் பெண் ஒருவரை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Advertisement
இந்த நிலையில் தற்போது பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்யப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டு யுவதி கைது செய்யப்பட்டவரது மனைவி என்றும் கூறப்படுகின்றது.