ஆற்றிலிருந்து வயோதிப் பெண்ணின் சடலம் மீட்பு

மகாவெலி ஆற்றில் இருந்து வயோதிப் பெண்ணின் சடலம் ஒன்றை நாவலப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஆறு பிள்ளைகளின் தாயான 84 வயதுடைய நாவலப்பிட்டி டேலி வீதியை சேர்ந்த ஹெகலின்னாரங்கல என்பரவே இன்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த தாய் காணாமல் போயுள்ளதாக நாலப்பிட்ட பொலிஸார் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்டவரின் மகள் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்தோடு பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் நாவலப்பிட்டி பத்துருபிட்டிய பகுதியில் மகாவெலி ஆற்றின் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸாருக்கு பிரதேசவாசிகளினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இதனையடுத்து நாலப்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்ற நீதிபதி மிலந்த விமலரத்ன முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply