இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்தது உறுதி

மாலைத்தீவிற்கு இலங்கையில் இருந்து சிறிய அளவிலான சுத்திகரிக்கப்பட்ட மணல் இடைக்கிடை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.

மேலும் புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலைத்தீவுக்கு இதுவரை 8 கியூப் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்ட ஒரு கியூப் மணல் 180,000 ரூபாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஊடகங்களில் வெளியான விதத்தில் தீவுகளை அமைப்பதற்காக மணல் அனுப்பப்படவில்லையென பணியகம் கூறுகின்றது.

மேலும் மணல் ஏற்றுமதிக்காக தம்மால் எந்தவித அனுமதிப் பத்திரமும் விநியோகிக்கப்படவில்லையென பணியகம் தெரிவிக்கின்றது.

அத்தோடு மாலைத்தீவில் நிர்மானப் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனமொன்றுக்கே இந்த மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் தடாகங்கள், குழாய் நீர் திட்டம் மற்றும் நீர் சுத்திகரிப்பு பணிகளுக்காகவே இந்த மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply