
வவுனியாவில் உயிரிழந்த 8 பேருக்குத் தொற்று!
வவுனியாவில் நேற்று தூக்கில்தொங்கி உயிர்மாய்த்தவர் உட்பட உயிரிழந்த 8 பேருக்குக் கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் மூவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் மருத்துவமனையின் கொரோனா விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுச் சாவடைந்தனர்.
மற்றையவர் வவுனியா பாரதிபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கி சாவடைந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஏனைய நால்வரில், இருவர் அவர்களது வீடுகளில் சுகவீனம் காரணமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மற்றைய இருவரும் வவுனியா முதியவர் காப்பகத்தில் உயிரிழந்தனர். அந்த முதியோர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதனையடுத்து அந்த முதியோர் இல்லம் தனிமைப்படுத்தப்பட்டது.





