
அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அமைச்சரை பதிவிவிலக்க வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையுடன் சென்று அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி முழந்தாளிடவைத்துள்ளார் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹொன்ர ரத்வத்த. இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கின்றேன். அத்துடன் இவரை அரசாங்கம் பதவி விலக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்த அராஜக சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதுடன் அவரை கைது செய்து பதவியில் இருந்தும் தூக்க வெண்டும். என்றார்.





