அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்- சட்டத்தரணி சுகாஸ்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கும் கிழக்கும் கிளர்ந்தெழும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சிறைச்சாலைக்குள் அடாத்தாகப் பிரவேசித்து தமிழ் அரசியல்கைதிகளை மிரட்டி முட்டுக்காலில் வைத்து சித்திரவதை செய்து மிரட்டிய ஆளுங்கட்சி சிங்களப் பாராளுமன்ற உறுப்பினரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சிங்களக் கட்சிகளுக்கு தமிழர் தாயகத்திலிருந்து வால் பிடிப்போர் இனி அம்மணமாகத் திரியுங்கள்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கும் கிழக்கும் கிளர்ந்தெழும். கொரோனாக் காலத்தில் யாருக்கும் தெரியாமல் அரசியல் கைதிகளில் கைவைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மேலும், ஜனநாயகத்தை மதிக்கின்ற, நாகரிக சமூகத்தில் இருக்கின்ற எவராலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உடனடியாக ராஜாங்க அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *