வவுனியாவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு வீடு கையளிப்பு!

வவுனியா மாவட்டத்திலுள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு புதிய வீடொன்றை நன்கொடையாக நேற்று (14) சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவால் வழங்கி வைக்கப்பட்டது.

கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து வாழும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு வவுனியா மாமயிலங்குளம் பகுதியில் கட்டப்பட்ட புதிய வீடொன்று வழங்கி வைக்கப்பட்டது.

சிவில் பாதுகாப்பு படையின் நிதி மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் புதிய வீட்டின் கட்டுமானத்துடன் ஒப்படைப்பு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா சிவில் பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சூரிய அஸ்மடல மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் மூத்த தளபதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply