சிசிடிவி ஆதாரங்களை அழிப்பதற்கு முன்னர் விசாரணை நடத்த வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

குடிபோதையில் அமைச்சர் சிறைச்சாலைக்குள் நுழைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவங்களின் போது சிசிடிவி ஆதாரங்களை உடனடியாக சேதப்படுத்துதல் அல்லது அழிக்கும் செயற்பாட்டை உடனடியாக தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு சராசரி குடிமகன் இந்தச் செயலைச் செய்திருந்தால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலிடப்பட்டிருப்பர் என்பதையும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.

செல்வாக்கு மிக்க இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்குச் சென்றதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இதேவேளை குடிபோதையில் இருந்த இராஜாங்க அமைச்சர் கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிடச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தினார் என்ற செய்தியும் வெளியாகிய நிலையில் அம்பிகா சற்குணநாதன் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *