இரண்டு வேளை சாப்பிட சொல்லும் அரசாங்கம்- அமைச்சர்களுக்கு 200 வீடுகளை கட்டிக் கொடுக்கின்றது.!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ளும் வகையில் மக்களின் உணவு வேளையை சுருக்குவதற்கு வலியுறுத்திவிட்டு புதிய அமைச்சர்களுக்கு 200 வீடுகளை கட்டி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் நிதி அமைச்சகம் மற்றும் மத்திய வங்கியின் நடவடிக்கைகளால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் புதிய அமைச்சர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அந்த புதிய அமைச்சர்கள் மக்களிடம் இரண்டுவேளை சாப்பிடுமாறு ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் இன்னும் சிறிது காலம் செல்கின்றபோது இவர்களது வீட்டு வேலை திட்டங்களை முன்னெடுக்கும் சமயத்தில் மக்களிடம் ஒருவேளை சாப்பிடுமாறு கூறுவார்கள்.

மேலும் மக்களிடம் உணவு வேளையை சுருக்கச் சொல்லி மக்களை கஷ்டபடுத்தி விட்டு அமைச்சர்களுக்கு சுகபோக வாழ்கையை அரசாங்கம் அமைத்து கொடுக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply