தமது 16 வயது மகளைக் காணவில்லை என கொழும்பின் புறநகர் கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
குறித்த சிறுமி ஆடைகளை உலரவிடுவதற்காக நேற்று (19) பிற்பகல் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
அதன்பின்னர் அவர் இன்று (20) வரை வீடு திரும்பவில்லை என சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி மாயமான சம்பவம் தொடர்பில் பொலிஸார் உடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.