நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம் – கமல்ஹாசன்

நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு காரணமாக இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘ஜெய்ப்பூரில் 35 இலட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க, இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்’எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply