அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத் துப்பாக்கியுடன் புகுந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர், தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அச்சுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், சிறைச்சாலைகள் நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சரை பதவி நீக்கி, கைது செய்ய வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளது.






