உத்தரப்பிரதேசத்தில் டெங்கு தொற்றாளர்கள் அதிகரிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பிரோசாபாத் மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் 578 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் அதிகளவில் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெங்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply