குடிபோதையில் புஷ்பிகாவும் அமைச்சருடன் சென்றாரா? வெடித்தது புதிய சர்ச்சை

வெலிக்கடை சிறைச்சாலையில், தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டி கலகத்தை ஏற்படுத்திய அமைச்சருடன், அண்மையில் இடம்பெற்ற இலங்கையின் அழகிப்போட்டியில் கிரீடத்தை இழந்து மீண்டும் பெற்றுக் கொண்ட அழகு ராணியான புஷ்பிகா டி சில்வா உட்பட மேலும் 3 பேர் அமைச்சர்களுடன் இருந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, மரண தண்டனை வழங்கியுள்ள கைதிகள் உள்ள சிறைச் சாலையின் நடுவே உள்ள தூக்கு மேடைக்கு சென்ற அமைச்சர், தன்னுடன் வந்த மற்றவர்களுக்கும் அந்த தூக்கு மேடையை காண்பித்து உள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த அமைச்சர் அதிக போதையில் இருந்ததாகவும், துப்பாக்கியை கையில் வைத்திருந்த நிலையில் இரண்டு தடவை சரியான நிலையில்லாமல் கீழே விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் திருமணமானவர்களுக்கான அழகிப்போட்டியில் கிரீடம் வழங்கப்பட்டு பின்பு வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதன் பின்னணியில், உலக அளவில் பெரிதும் பாராட்டப்பட்ட அழகியான புஷ்பிகா டி சில்வாவும் இந்த சம்பவத்தின்போது அருகில் இருந்ததாக ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply